புதன், டிசம்பர் 12, 2012

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் பதிக்கப்பட்டிருப்பது இரட்டை இலை அல்ல!!: தமிழக அரசு 'சூப்பர்' விளக்கம்!!!!



சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் பதிக்கப்பட்டிருப்பது இரட்டை இலையே கிடையாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தை தமிழக அரசு புதுப்பித்து உள்ளது. இதை அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். ஆனால் இந்த நினைவிடத்தின் முகப்பில் அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலை பொருத்தப்பட்டிருக்கிறது என்றும் இதனை நீக்க வேண்டும் என்றும்
திமுக சார்பில் வழக்கறிஞர் அணி செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இம்மனு இன்று நீதிபதி பால்வசந்த குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் ஆஜராகி, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் பதிக்கப்பட்டிருப்பது இரட்டை இலை வடிவம் இல்லை.. பறக்கும் குதிரையின் உயர்த்தப்பட்ட இறகுகள் என்று விளக்கம் அளித்தார். இந்த விளக்கம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக