புதன், டிசம்பர் 12, 2012

புதிய 'பாலியல் தாக்குதல்' சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை: பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் !

பெண்களுக்கெதிரான பாலியல் தாக்குதலில் ஈடுபடுவோருக்கு குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் முதல் ஆயுள் சிறை தண்டனை வரை வழங்கும் சட்ட திருத்தத்தை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக, கிரிமணல் சட்ட (திருத்த) மசோதா 2012, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை இணை
மந்திரி ஆர்.பி.என்.சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய உள்துறை இணை மந்திரி ஆர்.பி.என்.சிங், கூறியதாவது:-

பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட (திருத்த) மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் படி, பாலியல் தாக்குதலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு கூடுதலாக அபராதம் விதிக்கவும், தண்டனை காலத்தை குறைந்தபட்சம் 10 ஆண்டு முதல் ஆயுள் வரை உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

'கற்பழிப்பு' என்ற வார்த்தையை 'பாலியல் தாக்குதல்' என மாற்றி, இருபாலருக்கும் பொதுவான சட்டமாகவும், குற்றத்தின் தன்மையை விரிவுபடுத்தும் வகையிலும் இந்த புதிய சட்டம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக