பிரித்தானியா அரண்மனை பணியாளர் ஒருவர் கூறிய கருத்தை மேற்கோள் காட்டி 'டெல்லி ஸ்டார்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஜெசிந்தாவின் மரணத்தைப் பற்றி அறிந்த கேட், வேதனையில் ஆழ்ந்துள்ளார். இந்த தற்கொலை மரணத்திற்கு நான் காரணமாகி விட்டேன். என்னை அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்காவிட்டால், இதைப் போன்றதொரு துயரச்சம்பவம் நடந்திருக்காதே, என்று அவர் வேதனைப்படுகிறார். ஜெசிந்தா,
செவிலியராக வேலைசெய்யும் குறிப்பிட்ட அந்த யூனிட்டில் என்னை அனுமதிக்காதிருந்தால், அந்தப்பெண் இறந்திருக்க முடியாது என கேட் கருதுகின்றார்.
முதல் முறையாக, மன்னர் 7ம் எட்வர்ட் மருத்துவமனையில் தங்கியபோது நடந்த இந்த துயரச்சம்பவத்தினால், அடுத்த முறை மீண்டும் இதே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது கேட்டு-க்கு சுலபமான அனுபவமாக இருக்காது என அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக