சுவிஸ் என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாடு கறுப்பு பணம் பதுக்குவோரின் புகலிடமாக உள்ளது என உலக நாடுகள் பலவும் கூறி வருகின்றன. இந்திய தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் உள்ளிட்டோரும் சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில், பிரபல தொழில் அதிபர்கள் முகேஷ்
அம்பானி, அவரது தம்பி அனில் அம்பானி, காங்கிரஸ் எம்.பி. அனு தாண்டன், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் உள்ளிட்ட 700 பேர் சுவிஸ் நாட்டில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் ரூ.6 ஆயிரம் கோடியை குவித்து வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அம்பானி, அவரது தம்பி அனில் அம்பானி, காங்கிரஸ் எம்.பி. அனு தாண்டன், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் உள்ளிட்ட 700 பேர் சுவிஸ் நாட்டில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் ரூ.6 ஆயிரம் கோடியை குவித்து வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசும் அறிவித்தது. இந்தியா மட்டுமல்லாது பல உலக நாடுகள், இப்படி கறுப்பு பணத்தை பதுக்குவதற்கான புகலிடமாக சுவிட்சர்லாந்து வங்கிகள் விளங்குவதை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சுவிட்சர்லாந்து நாட்டு அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், வங்கிகள் கணக்கில் வராத கறுப்பு பணத்தை பெறுவதை தடை செய்து அதிரடி சட்டம் ஒன்றை கொண்டு வர சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டம் வந்தால் வங்கிகள் மட்டுமல்லாது சுவிட்சர்லாந்தில் உள்ள நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட எந்தவொரு அமைப்பும் கணக்கில் வராத யாருடைய பணத்தையும் எந்த நாட்டிலிருந்தும் பெற முடியாத நிலை உருவாகி விடும்.
இதற்கான சட்டத்தை இயற்றுவது தொடர்பாக வரைவு மசோதா ஒன்றை புத்தாண்டில் அளிக்குமாறு சுவிட்சர்லாந்து நாட்டு அரசின் சார்பில் முடிவு எடுக்கிற உயர் அமைப்பான சுவிட்சர்லாந்து பெடரல் கவுன்சில், அந்த நாட்டின் நிதித்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பெர்ன் நகரில் நடந்த பெடரல் கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக சுவிஸ் பெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான பிரச்சினைகளை ஒடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
எனவே புத்தாண்டில் கறுப்பு பண பதுக்கலுக்கு எதிரான சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசு கொண்டு வந்து விட்டால், அது கறுப்பு பண முதலைகளுக்கு பெருத்த அடியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக