திங்கள், டிசம்பர் 17, 2012

பிஜி தீவைச் சூறையாடிய கடும் சூறாவளி !


பசிபிக் கடலில் உருவாகியுள்ள கடும் சூறாவளி காற்று, பிஜி தீவைச் சூறையாடிக்கொண்டுள்ளது. பிஜி தீவில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் சூறாவளி காற்று வீசியடித்தபடி உள்ளது. இப்புயல் பசிபிக்  பெருங்கடலில் மையங்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வீசிக்கொண்டிருக்கும் புயல் காற்றினைத் தொடர்ந்து பிஜியின் விமானசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல்
வீசத்துவங்கியதுமே அங்குள்ள ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுவிட்டது. இப்புயலில் இதுவரை நான்கு பேர் பலியாகியுள்ளதாக தெரிகிறது. 10 பேரைக் காணவில்லை.
புயலுடன் பலத்த மழையும் பெய்துவருவதால் மலை பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளிலிருந்து வெளியாகியுள்ள மக்கள் இதுவரை 200 மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பிஜி தீவினைச் சுற்றியுள்ள சிறிய தீவுகள் இப்புயலால் மூழ்கிவிடும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புயலைச் சமாளிக்க தேவையான உதவிகள் வழங்கும்படி பிரான்ஸ் மற்றும் நியூஸிலாந்து நாடுகளிடம் பிஜி தீவின் ராணுவ தலைவர் வொரிக் பைனிமராமா கோரிக்கை விடுத்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக