செவ்வாய், டிசம்பர் 04, 2012

நாடாளுமன்ற உறுப்பினரை அழகி என வர்ணித்த அமைச்சர் !

கொழும்பு - பெண்  உறுப்பினரை பேரழகி என  அமைச்சர் வர்ணித்ததால் கொழும்பு நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியினைச் சார்ந்தவர் ரோஸி சேனாநாயக்க. இவர் 1980 களில் அழகிப் போட்டிகளில் பட்டம் வென்றவர் ஆவார். இன்று நாடாளுமன்றத்தில் அவர் ஒரு கேள்வி கேட்டார்.   இதற்கு பதிலளிக்க வந்த போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம,
”எனது 19 வருட அரசியல் வரலாற்றில் ஒரு பேரழகி என்னிடம் முதன் முதலாக கேள்வி கேட்டுள்ளார். இன்று நான் பிரதி சபாநாயகரைப் பார்த்து பதிலளிக்காமல் அந்த பேரழகியின் முகம் பார்த்து பதிலளிக்கப் போகிறேன், ஆனால் அவரைப் பார்க்கும்போது வார்த்தைகள் தடுமாறுகின்றன” எனக் குறிப்பிட்டார. ”ஆனாலும் பேரழகியின் முகத்தைப் பார்க்கும்போது எனது மனதில் உதிக்கும் பல்வேறு எண்ணங்களை இந்த சபையில் கூறிவிட முடியாது. ரோசியை இவ்வாறு நான் வர்ணிப்பதால் யாருக்கும் கவலை ஏற்படுகிறதோ தெரியவில்லை” என்றார் குமார வெல்கம.

அமைச்சரின் இத்தகைய பேச்சினைக் கண்டித்த ரோஸி சேனாநாயக்க, அமைச்சரின் கருத்துக்கள் தன்னை நிந்தனை செய்வதாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். அழகினைப் பார்த்து பதிலளிக்காமல், கேள்வியின் தன்மையினை உணர்ந்து பதிலளிக்குமாறு அமைச்சருக்கு அறிவுறுத்தினார் ரோஸி.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக