திங்கள், டிசம்பர் 03, 2012

எதற்கும் துணிந்த இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்! ராஜீவ் கொலையில் அவிழும் மர்ம முடிச்சுக்கள்...

இஸ்ரேல் உளவு அமைப்பான “மொசாத்” மூலம் ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் கூறியிருந்தார். ராஜீவ் படுகொலை சம்பவத்திற்கு முன்பாகவே மொசாத் பற்றி எச்சரித்திருந்தார் அராபத். இந்நிலையில் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் எழுதியுள்ள புத்தகத்தில் ராஜீவ் கொலைக்கும் மொசாத் அமைப்புக்கும் சம்மந்தம் உள்ளது என்று பல ஆதாரங்களுடன் எழுதியது பழைய கதை ஆனால் வேலுச்சாமி எழுதிய புத்தகம் வெளிவந்தவுடன் சேஷன் புத்தகத்தையும் பலர் புரட்ட துவங்கியிருக்கிறார்கள்.

பாலஸ்தீன விவகாரத்தில் எத்தனையோ நாடுகள் எதிர்த்தும் எதற்கும் அசராமல் இஸ்ரல் திமிராக இருப்பதற்கு காரணமே இஸ்ரேலிய உளவுப்படை. இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர். அத்தனை பெரும் உளவாளிகள். ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள் மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடி கொண்டிருக்கிறார்கள் நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை உலகத்தில் இருக்கும் உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிட பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம்.
உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் அதிக அதிகாரத்தை கொண்டிருப்பது மொசாத் மட்டுமே இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொசாத் ஏஜெண்ட், நமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு மொசாத் அமைப்பிற்கு அனுமதி இருக்கிறது. இந்த உளவு அமைப்பில் உலகத்தில் உள்ள எவரும் சேரலாம் யூதர்களுக்கு முன்னுரிமை உண்டு. ஆனால், அவர்கள் அளிக்கும் பயிற்ச்சிகள் பரம ரகசியமாக வைக்கப்படும்.
ராஜீவ் கொலையில் அந்நிய சதி பற்றி விசாரணை நடத்திய நீதிபதி ஜெயின், தமது அறிக்கையிலும் விடுதலைபுலிகள், மொசாத் மற்றும் அமெரிக்க உளவு நிறுவனமான சி,ஐ,ஏ இடையிலான தொடர்புகளை புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இப்படி ஒரு முடிவுக்கு நீதிபதி ஜெயின் வருவதற்கு காரநாமே ஒரு புத்தகம்தான் மோசத்தில் அதிகாரியாகப் பணியாற்றி, அதிலிருந்து வெளியேறிய விக்டர் ஓஸ்ட்ரோஸ்கி (Victor Ostrovsky) மொசாத் ரகசிய செயல்பாடுகளைப் பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். நூலின் பெயர் “By way of deception”.
இதில் “மொசாத் நிறுவனம், ஒரே நேரத்தில் சிங்கள ராணுவத்திற்கும் தமிழ் கொரில்லா குழுவிக்கும் பயிற்சிகளை அளித்தது” என்று குறிப்பட்டுள்ளார். அப்படி பயிற்சி பெற்றது விடுதலைப்புலிகள் தான் என்று கூறப்பட்டது.
ஆனால், 1984-ம் ஆண்டில் ஈழ விடுதலைக்காக அங்குள்ள தமிழர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து போராடினர். குறிப்பாக, “எல்.டி.டி.ஈ”, “டெலோ”, “ஈ.பி.ஆர்.எல்.எப்”, “ஈரோஸ்”, “ப்ளாட்” என்ற எல்லா அமைப்புகளுமே “தமிழ் புலிகள்” என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தன. இதில் எந்த பிரிவுக்கு மொசாத் பயிற்சி அளித்தது என்று இன்னமும் புரியாத புதிராக உள்ளது. மொத்தத்தில் மொசாத் எதையும் செய்யும். அதைக் கண்டு பிடிப்பது குதிரைக் கொம்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக