திங்கள், டிசம்பர் 03, 2012

சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485 !

சீனாவில் குரங்கு கறி பரிமாரியதால் இரண்டு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள உணவகங்களில் வன விலங்குகள் உணவாக பயன்படுத்தப்படுகிறது என்று அரசு கட்டுப்பாட்டில் உள்ள சீனா சென்ட்ரல் டிவி செய்தி வெளியிட்டது. இதையடுத்து போலீசார் ஜியாங்சி
மகாணாத்தில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குட்டி குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளை உணவாகப் பயன்படுத்திய 2 உணவகங்களுக்கு சீல் வைத்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஜீசி வனத்துறை தலைவர் வு கைபா உள்பட 4 வனத்துறை அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
மேலும் ஜீசி கவுன்ட்டியில் வனவிலங்குகளைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1,300 இரும்பு சாதனங்கள் மற்றும் 13 துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தவிர பதப்படுத்தப்பட்ட காட்டுப் பன்றி, மான், எலிகள் மற்றும் பாம்புகளை கண்டுபிடித்தனர்.
சீல் வைக்கப்பட்ட உணவகங்களில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ. 2,788க்கு விற்பகப்பட்டுள்ளது. மேலும் குரங்கு மூளை ஒரு பிளேட் ரூ.3,485க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக