திங்கள், டிசம்பர் 03, 2012

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிறார் ?

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான இக்பாலை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க நீதிபதிகள் குழு பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கடநத 2010-ம் ஆண்டு முதல் இக்பால் பணியாற்றிவருகிறார். இவரது நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர்
கலப்பதை தடுக்கும் விதத்தில் திருப்பூர் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளை மூடுவதற்காக பிறப்பித்த உத்தரவு, சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்காக பிறப்பித்த உத்தரவு, சென்னையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை முறைப்படுத்தி பிறப்பித்த உத்தரவு ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீரின் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட குழு எம்.ஒய்.இக்பாலை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கலாம் என்று பரிந்துரைத்தது. இது மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இப்பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக