தண்ணீர் தர தாமதப்படுத்திய கர்நாடக அரசு மீது, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர திட்டமிட்ட நிலையில்,ஒரு நாள் தாமதமாக தண்ணீர் திறந்ததற்காக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடகம் காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற அறிவுறுத்தல்படி இல்லாமல், ஒரு நாள் தாமதமாக நேற்று இரவில் இருந்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று திறந்து விட வேண்டிய நீரைத் திறக்காமல் ஒரு நாள் தாமதப்படுத்தியதால், ஒரு டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு உடனே வராமல் போனது. எனவே, 5-ம் தேதி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த உத்தரவை மதிக்காமல், போக்கு காட்டிய கர்நாடக அரசை எதிர்த்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க தமிழகத் தரப்பு தயாரானது.

தமிழக வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் பி.லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனுவைத் தாக்கல் செய்ய முடிவு செய்தார். ஆனால் நேற்றிரவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், அம்மனுவில் கர்நாடகாவின் தாமதத்தை சுட்டிக்காட்டி இன்று காலை அம்மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் தமிழகத்திற்கு ஒரு நாள் தாமதமாக தண்ணீர் திறந்துவிட்டதற்காக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு இன்று வருத்தம் தெரிவித்தது.மேலும் ஒரு நாள் தாமதத்தை ஈடுகட்டும் வகையில்,டிசம்பர் 9 ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என்பதற்கு பதிலாக 10 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதாக கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது.

கர்நாடகாவின் இந்த உறுதியை தொடர்ந்து, எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல், திங்கட்கிழமையன்று காவிரி வழக்கு விசாரணைக்கு வரும்போது இதுபற்றி விசாரிக்கப்படும் என்று அறிவித்தது.
இதனிடையே கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் டெல்லிக்கு விரைந்துள்ளார். பிரதமர் அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு, பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பதற்கு நேரம் கேட்டு அனுமதி கோரியுள்ளார். ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் இதுவரை தரப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக