சனி, டிசம்பர் 08, 2012

நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இணைய சொகுசு காரும் கரன்ஸி நிரம்பிய வங்கிக்கணக்கும் கைமாறியதா?

ரு செல்லக் குழந்தையின் அத்துமீறல்கூட இனி என் னி​டம் இருக்காது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இடும் கட்டளைகளை அப்படியே பின்பற்றி நடப்பேன். இனி என் வாழ்வும் தமிழும் இந்தக் கழகத்தின் ஏற்றத்துக்கும், எழுச்சிக்குமானதாகவே இருக்கும்” - அ.தி.மு.க-வின் புதிய உறுப்பினர் 
நாஞ்சில் சம்பத் (எண்.45175402) விடுக்கும் அடேங்கப்பா ஸ்டேட்மென்ட் இது.   
வைகோவுக்கு எதிராக ம.தி.மு.க-வுக்குள் போர் முழக்கம் கிளப்பிய நாஞ்சில் சம்பத், தி.மு.க-வுக்குத் தாவுகிறார், தே.மு.தி.க-வில் இணைகிறார் என்று யூகங்கள் சிறகடித்த வேளையில், தான் அ.தி.மு.க-வின் பக்கம் சாய்வதை கடந்த வாரம் அளித்த பேட்டியில்தான் முதலில் வெளிப்படுத்தினார் சம்பத். “தமிழக உரிமையை வென்றெடுக்க முதல்வர் முனைப்புக் காட்டுகிறார்” என்று ஏகத்துக்கும் துதிபாடி இருந்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த 4-ம் தேதி ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.க-வில் ஐக்கியமாகி விட் டார். தாவிய கையோடு கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பதவியையும் வாங்கி வந்திருக்கிறார்.

““எப்படி சாத்தியமாயிற்று இந்த இணைப்பு?

““ஏற்கெனவே ஐந்து ஆண்டு காலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, ஆளுமை மிகுந்த அவர்களின் தலைமையை விமர்சித்து நான் பேசி இருக்கிறேன். அதனால், எனக்கு எந்த நெருடலும் இல்லை. இதற்கு முன் நான் சார்ந்திருந்த கட்சியின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் என் உயிரை உருக்கி உழைத்தேன். ஆனால், அந்தத் தலைமையோ என்னை உதாசீனம் செய்து வெறுப்பை, நெருப்பை உமிழ்ந்தது. ஆதரவற்றுக்கிடந்த குழந்தை ஒரு தாயின் மடியைத் தேடித் தாவுவதுபோல், இந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கிறேன். ஆனந்தமான உணர்வுப்பெருக்கில் இருக்கிறேன். பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல் இருக்கிறது இந்தக் கலப்பு.”“

““சந்தித்த வேளையில் என்ன சொன்​னார்முதல்வர்?

““அம்மா என்னை இன்முகத்​தோடு வரவேற்றார்கள். மிகுந்த பரிவுடனும் கனிவுடனும் என் குடும்ப நிலை வரை கேட்டு அறிந்தார்கள். “சம்பத்துக்கு ஒளிமய​மான எதிர்காலம் இருக்கிறது” என்று எனக்கு நம்பிக்கை ஊட்டினார்கள். என் மகளின் திருமணத்துக்கு சென்னையில் வரவேற்பு வைக்கச்சொல்லி, வாழ்த்த வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் மிகவும் நெகிழ்ந்துபோனேன். நல்ல தலைமைப் பண்புக்கான அத்தனை இலக்கணங்களும் அவரிடம் இருக்கின்றன.

““அ.தி.மு.க-வில் உங்கள் பணி என்ன?

““40 நாடாளுமன்றத் தொகுதிக​ளிலும் அ.தி.மு.க. ஈடில்லா வெற் றியைப் பெற முழுவீச்சோடு நாடெல்லாம் பேசுவேன். இந்தக் கழகம் அதன் இலக்கை எட்டுவதற்கு வலிமை மிகுந்த ஒரு கருவியாக நான் செயல்படுவேன். இது, எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பும்கூட. ஒரு முதல்வர் என்ற முறையிலும், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் என்ற முறையிலும் அம்மா அவர்கள் அறிவித்துள்ள நலத் திட்டங்களையும் அறிவிப்புகளையும் பற்றிப் பேசுவேன். தேர் வுக்குத் தயார்செய்யும் மாணவன்போல் படித்துக் கொண்டு இருக்கிறேன். அதையும், அம்மா அவர்களின் ஆளுமையையும், கம் பீரத்தையும், துணிச்சல் மிகுந்த தலைமைப் பண்பையும் வியந்து பேசுவேன். தமிழக முன்னேற்றத்துக்குத் தடைக்கல்லாக இருந்த தீயசக்திகளின் முகமூடியைக் கிழித்தெறிவேன். ஓர் எதிர்க்கட்சிக்கு உரிய இலக்கணம் எதுவும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக சிலர் போடுகிற தப்புத்தாளங்களை அம்பலப்படுத்துவேன். தமிழகத்துக்கு எல்லா வகையிலும் பொருத்தமான தலைமை, புரட்சித் தலைவியின் தலைமைதான் என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எல்லையைத் தாண்டி மக்களும் அங்கீகரிக்கிற வகையில் எனது பேச்சை அமைத்துக் கொள்வேன்.

““அதிகப் பணத்துக்கு ஏலம் போவதற்காக, உங்களைச் சந்தைப்படுத்திக் கொண்டீர்கள்என்று குற்றம் சாட்டுகிறார்களே?

““அவங்க பாட்டுக்கு எழுதிட்டுப்​போகட்டும். விமர்சனங்களை நான் அலட் சியப்படுத்துகிறேன். காய்த்த மரத்தில் கல்லெறிவது சிலரின் பிறவிப் பழக்கம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவ சியம் எனக்கு இல்லை

““ஒரு சொகுசு காரும், கரன்ஸி நிரம்பிய வங்கிக் கணக்கு ஒன்றும் உங்களுக்குத் தரப்பட்டுஉள்ளதாமே?

““வதந்திகளை நம்ப வேண்டாம்

““உங்கள் வீட்டை இடித்தவராயிற்றே ஜெய லலிதா?

““ம்ம்ம்... (சில நொடிகள் மௌனத்துக்குப் பிறகு) கடந்த காலங்களை எல்லாம் கடந்து வந்து ​விட்டேன். சொல்லப்போனால், கடந்த காலங்களைக் கசக்கி எறிந்துவிட்டேன். தமிழகத்தில் புதிய சரித்திரம் படைக்க இருக்கிற அம்மா அவர்களின் முயற்சிக்கு ஏணியாகவும் தோணியாகவும் இருப்பதில்தான் எனது கவனம் இருக்கிறது. கடந்த காலம் என்பது கடந்த காலம்தான். எனது இணைவில் சுயநலம் இல்லை. என் பேச்சையும், உழைப்பையும், ஆற்றலையும் அ.தி.மு.க-வுக்கு அர்ப்பணிக்கிறேன். ஒரு செல்லக் குழந்தையின் அத்துமீறல்கூட என்னிடம் இருக்காது. இந்த அங்கீகாரத்தை பெரும் நன்றி உணர்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அதற்கு விசுவாசமாக நடந்துகொள்வது எப்படி என்பதுதான் என் னுடைய கவலையும் கவனமும். அந்தத் திசையை நோக்கி நான் பயணிக்க ஆரம்பித்து விட்டேன். வேறு எண்ணவோட்டம் எதுவும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக