சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றது. மொத்தம் 232 பேர் வாக்களித்த நிலையில், அரசுக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 109 வாக்குகளும் பதிவானது. இதனால் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்து எதிர்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் 14 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சமாஜ்வாதி கட்சி ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்தது. முன்னதாக முன்னதாக சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து
மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்ததால் மத்திய அரசு தப்பியது.
இதையடுத்து மாநிலங்களவையில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுபுடன் கூடிய விவாதம் நேற்று தொடங்கியது.
அதிமுகவின் மாநிலங்களவை தலைவர் மைத்ரேயன் விவாதத்தை தொடங்கி வைத்து,அன்னிய முதலீட்டிற்கு எதிராக பேசினார்.அவரைத் தொடர்ந்து பா.ஜனதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினார்கள்.
சமாஜ்வாதி, திமுக. எம்.பி.க்கள் பேசுகையில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாகவும், ஆனால் மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்போம் என்று உறுதி அளித்தனர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக விவாதம் நடந்தது.பிற்பகல் 3.15 மணி அளவில் விவாதம் முடிவடைந்து வாக்கெடுப்பு நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக