சனி, டிசம்பர் 08, 2012

நரவேட்டை நாயகனுக்கு விசா கிடையாது : அமெரிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

நரவேட்டை நாயகன் நரேந்திர மோடிக்கு விசா வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவருக்கு விசா வழங்கக் கூடாது என்று கடந்த சில நாள்களுக்கு முன்புதான் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர் சேர்ந்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு கடிதம் எழுதினர். குஜராத்தில் கலவரத்துக்கு காரணமாக இருந்த மோடிக்கு விசா மறுப்பு கொள்கையை அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியது: அமெரிக்க எம்.பி.க்கள் எழுதிய கடிதம் எங்களுக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற அமெரிக்காவின் கொள்கையிலும் மாற்றம் இல்லை.
குஜராத் மாநிலத்துடன் வர்த்தக உறவு, முதலீடு, பல்கலைக்கழகங்கள் அளவிலான தொடர்புகள் தொடரும். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்து விட்டதா என்ற கேள்வியை இந்திய அரசிடம்தான் கேட்க வேண்டும் என்றார் மார்க் டோனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக