வாஷிங்டன் : அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நிவேடாவில், பூமிக்கு அடியில் அதிநவீன அணுகுண்டு சோதனையை அமெரிக்கா நேற்று நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த அணுக்குண்டு சோதனைக்கு போல்லக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அணுகுண்டு சோதனையில் அணுக்குண்டு வெடிக்காது. எதிர்விளைவுகளும் ஏற்படாது. வெடிக்காமல் அணுப்பொருட்களின் செயல்பாடுகளை ஆராய்வதற்காக இந்த அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக அமெரிக்க தேசிய அணு பாதுகாப்பு நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், போல்லக்ஸ் அணுகுண்டு சோதனை பூமிக்கு அடியில் நடத்தப்பட்டிருக்கிறது.
இது இப்படி நடந்த 27-வது சோதனை ஆகும். அணு ஆயுதங்கள் பாதுகாப்பு, ஆற்றல் பராமரிப்பு பற்றிய தகவல்கள் இந்த பரிசோதனை மூலம் தெரிய வரும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதியும் பூமிக்கு அடியில் பரோலா-பி அணுக்குண்டு சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக