உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கட்டிடம், கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. அதையட்டி, சம்பவ இடத்தில் இருந்த பா.ஜனதா தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கட்டியார் மற்றும் பால்தாக்கரே, கல்யாண்சிங், அசோக்
சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்பட 21 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.இரு பிரிவினருக்கு இடையே விரோதத்தை தூண்டி விடுதல், தேச ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவித்தல், பொது அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் வதந்தி பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பின்னர், குற்றச்சதி என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. ரேபரேலி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

கடந்த 2001-ம் ஆண்டு மே 4-ந் தேதி, அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி என்ற குற்றச்சாட்டை ரேபரேலி கோர்ட்டு ரத்து செய்தது. அதை எதிர்த்து, அலகாபாத் ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால், ரேபரேலி கோர்ட்டின் உத்தரவை கடந்த 2010-ம் ஆண்டு மே 21-ந் தேதி, ஐகோர்ட்டு உறுதி செய்தது. இருப்பினும், மற்ற குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அப்பீல் செய்தது. இந்த மனு, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. சார்பில் ஆஜராக வேண்டிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எஸ்.சாண்டியோக் ஆஜராகவில்லை. அதற்கு நீதிபதிகள் ஆழ்ந்த வேதனை தெரிவித்தனர். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இந்த கோர்ட்டை அலட்சியமாக எடுத்துக் கொள்வதாக அவர்கள் கூறினர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விரைவாக விசாரணை நடத்துமாறு ரேபரேலி கோர்ட்டுக்கு உத்தரவிட்டனர். சிவசேனா தலைவர் பால் தாக்கரே இறந்து விட்டதால், அவரது பெயரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து நீக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக