சனி, டிசம்பர் 15, 2012

உலகின் அசுத்தமான நகரம் மும்பை: ஆய்வில் தகவல் !


உலகின் மிகப்பெரிய சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனமான 'டிரிப் அட்வைசர்' உலகில் உள்ள 40 முக்கிய தலைநகரங்களின் சிறப்பம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. 75 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின.
இந்த முடிவுகளின் படி, ஷாப்பிங் செய்ய தகுந்த முதல் நகரமாக நியூயார்க் இடம் பெற்றுள்ளது. குறிப்பிட்ட இடத்திற்கு விரைவாக செல்லும் சாலை போக்குவரத்து வசதிகளில் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜுரிச் நகரம் முதலிடம் வகிக்கின்றது. மும்பை நகரம் கடைசி இடமான 40வது இடத்தில் உள்ளது.
சுத்தமான நகரங்களில், ஜப்பானின் டோக்கியோ நகரம் முதலிடத்திலும் மும்பை நகரம் 40வது இடத்தை பிடித்து அசுத்த நகரமாக உள்ளது.
முரட்டுத்தனமான உள்ளூர்வாசிகள், மோசமான ஷாப்பிங் வசதிகள், அசிங்கமான சாலைகள் ஆகியவை இந்த பட்டியலில் கடைசி 40வது இடத்தை மும்பை பிடிக்க காரணம் என்று 'டிரிப் அட்வைசர்' ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக