சனி, டிசம்பர் 15, 2012

அமெரிக்காவில் மழலையர் பள்ளிக் குழந்தைகள் 20 பேர் உள்பட 28 பேர் சுட்டு கொலை !

அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியில் கிண்டர்கார்டன் பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியானதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு
நடத்திய நபரும் சுட்டுக்கொல்லப்பட்டான். அமெரிக்காவில் கனெக்டிகட் நகரில் சான்டி ஹுக் தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு நேற்று ஒரு மர்ம மனிதன் இரண்டு துப்பாக்கிகளுடன் உள்ளே புகுந்தான். திடீரென்று அப்பள்ளி வளாகத்தில் உள்ள மழலையர் வகுப்புக்குள் புகுந்த அவன் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினான்.100 ரவுண்ட் வரை சுட்ட அவன் துப்பாக்கிக்கு 20 குழந்தைகள் உள்பட 27 பேர் ஸ்பாடிலேயே மாண்டனர். இதை நேரில் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர்களும், குழந்தைகளும் பீதியில் உறைந்து அலறினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொலையாளி கொல்லப் பட்டான். இந்த கொடூர செயலில் ஈடு பட்ட அவன் .அந்த பள்ளியில் பயிலும் குழந்தை ஒன்றின் தந்தை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் அங்கு உயிருடனுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்ட போலீஸ் இந்த சம்பவத்தில் எத்தனை குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்பது பற்றி கணக்கெடுத்து வருகிறார்கள். சம்பவ இடத்திலிருந்து மாணவர்கள் பயத்தில் கதறியபடி பலத்த பாதுகாப்புடன் வெளியேறும் காட்சிகளை அந்நாட்டு டிவிக்கள் ஒளிபரப்பின.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். அதிகாரிகள் தொடர்ந்து பள்ளியை சோதனை செய்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு 223 காலிபர் ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தங்களை பள்ளியிலிருந்து வெளியேற்றும் முன்னர், ஒவ்வொரு மாணவரையும் போலீசார் தீவிர சோதனை செய்ததாக மாணவர் ஒருவர் கூறினார்.
போலீசாருக்கு உதவ மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். ஆயுதங்களுடன் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களும் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக