வியாழன், டிசம்பர் 13, 2012

விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ராஜ்யசபாவில் ப.சிதம்பரம் தகவல் !

டெல்லி: நாட்டில் சோதனை முறையில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் இன்று கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ப.சிதம்பரம் கூறுகையில், உலகம் முழுவதும் 20 நாடுகளில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன. நமது நாட்டில் சோதனை ஓட்டமாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தபட இருக்கிறது. 10
ரூபாய் நோட்டு முதல் கட்டமாக பிளாஸ்ட்டிக் வெளியிடப்படுகிறது. ரூ1,000 கோடி மதிப்பிலான 100 கோடி ரூ10 பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்றார் அவர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக