மேட்டூர்: தமிழகத்துக்கு காவிரி நீரைத் தரவே முடியாது என்று கூறிவந்த கர்நாடகா அரசு நேற்று இரவு திடீரென வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட்டிருக்கிறது. காவிரி நீர் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஞாயிற்றுக்கிழமை வரை தமிழகத்துக்கு நாள்தோறும் 10 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடகா மாநில அரசு பெல்காமில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட கடும் எதிர்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் கர்நாடகாவுக்கு தண்ணீர் போதாது என்பதால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாகவும் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியிருந்தார். இதனால் கர்நாடகா மீது இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடரக் கூடிய நிலை இருந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கர்நாடகா அரசு நேற்று இரவு முதல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீரை திடீரென திறந்து விட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக