புதன், டிசம்பர் 05, 2012

பால் தாக்கரே சமாதியை அகற்று, மும்பை மாநகராட்சி ஆணை !

பால் தாக்கரே உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கும் இடத்தை சுற்றி இருக்கும் தற்காலிக கூடாரத்தை காலி செய்யுமாறு மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் தற்காலிக கூடாரம் காலி செய்யப்படாவிட்டால் மும்பை மேயராக இருக்கும் சிவசேன கட்சியை சேர்ந்த சுனில் பிரபுவின் பதவி பிடுங்கப்படும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது
குறித்து நடவடிக்கைக்கு உத்தரவிட்ட முதல்வர் பிரிதிவிராஜ் சவ்ஹான், பால் தாக்கரே மறைந்த போது சட்டம் ஒழுங்கு நிலைய கருத்தில் கொண்டு சிவாஜி பார்க்கில் உடல் தகனம் செய்யப்பட அரசு ஒத்துகொண்டதாகவும், ஆனால் தற்போது சிவசேன அங்கு நினைவிடம் கட்ட வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று கொள்ள முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு பேட்டியளித்த சிவசேன எம்பி, சஞ்சய் ராவுட், பால் தாக்கரே அடக்கம் செய்யப்பட்ட இடம் அயோத்தியா இடம் போன்றது என்றும், இதில் அரசோ, நீதிமன்றமோ தலையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.பால் தாக்கரே அடக்கம் செய்யப்பட்ட நாள் முதல் அதனை சுற்றி கூடாரங்களை அடித்து, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சிவசேனா தொண்டர்கள் கடவுள் போன்று தினமும் ஆராதனை செய்து வருகின்றனர். இதனை அகற்ற கோரி தான் தற்போது மும்பை மாநகராட்சி ஆணையர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே, சிவாஜி பூங்காவை சுற்றியுள்ள குடியிருப்பாளர்களும் பால் தாக்கரேக்கு சிவாஜி பூங்காவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுற்று சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக