புதன், டிசம்பர் 05, 2012

அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது விவகாரம்: மாநிலங்களவையில் அமளி!

புதுடெல்லி:நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்கில் கைதுச செய்வதாக கூறி மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. சமாஜ்வாதிக் கட்சி எம்.பிக்கள் மாநிலங்களவை கேள்வி நேரத்தில் இவ்விவகாரத்தை கிளப்பினர்.கேள்வி நேரத்திற்கு பிறகே இவ்விவகாரம் குறித்து விவாதிக்கவேண்டும் என்று
மாநிலங்களவை தலைவர் ஹாமித் அன்ஸாரி கூறியபொழுதும், இதனால் சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் சபை மைய பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய் என்று கோஷமிட்டபடி அமளியில் ஈடுபட்டனர். சமாஜ்வாடி எம்பிக்களை இருக்கைக்கு திரும்பிச் செல்லுமாறு ஹமீத் அன்சாரி பல தடவை கேட்டுக் கொண்டார். ஆனால் எம்பிக்கள் தொடர்ந்து கோஷம் போட்டுக் கொண்டே இருந்தனர்.

இதனால் மதியம் 12 மணி வரை சபையை ஒத்தி வைப்பதாக மேல்-சபை தலைவர் அன்சாரி அறிவித்தார்.பின்னர் அவை கூடியபொழுது, அரசு வேலையில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி சமாஜ்வாதிக் கட்சி எம்.பிக்கள் மீண்டும் அவையில் மத்தியில் சென்று அமளியில் ஈடுபட்டனர். மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று சமாஜ்வாதிக் கட்சி கோரிக்கை எழுப்பிய வேளையில் இம்மசோதாவை நிறைவேற்றக்கோரும் மாயாவதி கட்சியின் எம்.பிக்கள் அவையில் மெளனம் சாதித்தனர்.சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான மசோதாவில் பகுஜன் சமாஜ் கட்சியின் 21 எம்.பிக்களின் ஆதரவை தேடும் ஐ.மு அரசு, பதவி உயர்வில் எஸ்.சி,எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பரிசீலனை பட்டியலில்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதேவேளையில், குஜராத்தில் ஒரு எரிவாயு சுரங்க மைய ஊழல் தொடர்பாக வெளியான செய்தியை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். நரேந்திரமோடி அரசுகையெழுத்திட்ட எரிவாயு ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக தெஹல்காவில் செய்தி வெளியாகியிருந்தது. பார்படோஸில் பதிவுச் செய்த ஒரு போலி நிறுவனம் 20 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றதாகவும் தெஹல்கா கூறுகிறது. இந்த செய்தி அடங்கிய பத்திரிகையின் நகல்களை எடுத்துக் காட்டி காங்.எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து இரண்டு மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக