இனி கையெழுத்தில் வேறுபாடு காரணமாக காசோலை ரிட்டர்ன் ஆனால் கிரிமினல் வழக்கு தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.முன்னதாக குஜராத்தில் காசோலை ரிட்டர்ன் ஆனதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அந்த மாநில உயர் நீதிமன்றம் விசாரித்தது. அந்த வழக்கில், வங்கியில் உள்ள கணக்குதாரரின் கையெழுத்தும், காசோலையில் போடப்பட்ட கையெழுத்தும் வித்தியாசமாக இருந்ததால் காசோலையை வங்கி ரிட்டர்ன் செய்திருந்தது. கையெழுத்து வேறுபாட்டால் காசோலை ரிட்டர்ன் ஆவது கிரிமினல் குற்றமாகாது என்று
குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இதை நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து அளித்த தீர்ப்பில் நீதிபதிகள் ”’ கையெழுத்து வேறுபாட்டால் காசோலை ரிட்டர்ன் ஆனாலும் அது கிரிமினல் குற்றம்தான். இதற்காக காசோலை தந்தவர் மீது கிரிமினல் வழக்கு தொடரலாம்.
ஆனால், வழக்கு தொடருவதற்கு முன், காசோலை ரிட்டர்ன் ஆனது பற்றி சம்பந்தப்பட்டவருக்கு தகவல் தர வேண்டும். பணத்தை தர அவருக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பிறகும் பணத்தை தரவில்லை என்றால் கிரிமினல் வழக்கு தொடரலாம்””. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இப்படி கையெழுத்து வேறுபாட்டால் காசோலை ரிட்டர்ன் ஆனாலும் வழக்கு தொடரலாம் என்ற தீர்ப்பு காரணமாக காசோலை தருவதற்கு முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக