Dec 02: அமெரிக்க வெள்ளை மாளிகையில் கறுப்பர் ஒருவர் (ஒபாமா) அதிபராக வந்தது போல் இந்தியாவின் பிராமண ஹிந்துத்துவா இண்டலிஜன்ஸ் பீரோவின் (ஐ.பி) தலைமை இயக்குநராக செய்யத் ஆஸிஃப் இப்ராஹீம் என்ற முஸ்லிம் ஒருவர் பதவி ஏற்றுள்ளார்.பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தில் இருந்து செயல்படும் இண்டலிஜன்ஸ் பீரோ (ஐ.பி) யில் இதுவரை ஒரு முஸ்லீமுக்கு கூட தலைவர் பதவி அளிக்கப்பட்டதில்லை. இந்தியாவின் 125 ஆண்டுகால வரலாறு மாறுகிறது என்ற முறையில் இதை பார்க்க முடியவில்லை.
முஸ்லிம்களும், சீக்கியர்களும் இந்தியன் இண்டலிஜன்ஸ் பீரோவில் வாய்ப்பளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டே வந்தனர். 1993-ஆம் ஆண்டு வரை ஐ.பியிலும், ரா விலும் ஒரு முஸ்லிம் கூட அதிகாரியாக பணி நியமனம் செய்யப்படவில்லை.கஷ்மீரில் மோதல் தீவிரமடைந்திருந்த காலக்கட்டத்தில் ஆஸிஃப், ஐ.பியின் கஷ்மீர் ஆபரேசன் டெஸ்கில் பணியாற்றியுள்ளார். பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு இந்தியாவின் மதசார்பின்மை என்பது போலி என்கிற உண்மையை முஸ்லிம்கள் புரிந்து கொண்டார்கள். பாபர் மசூதி இடிப்பும் அதை தொடர்ந்து நடந்த கலவரங்களும் இந்தியாவில் முஸ்லிம்களை ஒரு பாதுகாபற்ற நிலைக்கு தள்ளியது.உளவுத்துறை மற்றும் நீதி துறையின் முஸ்லிம் விரோத போக்கு மற்றும் ஹிந்துத்துவா சிந்தனை இவற்றின் காரணமாக முஸ்லிம்களின் உரிமைள், பாதுகாப்புகள் கேள்விக்குறியானது. இந்நிலையில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதே நேரம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாசிச ஹிந்துதுவாவுக்கு மாற்றாக பல முஸ்லிம் இயக்கங்கள் தோன்றின. அவை முஸ்லிம்கள் பற்றி அப்பாவி ஹிந்து மக்களிடம் செயப்படும் முஸ்லிம் விரோத பிரச்சாரத்தை முறியடிக்க இரத்ததானம், மருத்துவ சேவை என்று தீவிர பொதுநல பணிகளில் ஈடுபட்டு வந்தன.
அவ்வியக்கங்கள் தங்களை போல் உரிமைகளை இழந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட, மதசார்பற்ற கட்சிகளோடும், இயக்கங்களோடும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்களது உரிமைகளை வலுவாக கேட்கத் தொடங்கினர். மேலும் அவர்கள் அரசியல் ரீதியாக ஒருங்கிணையவும் தலைப்பட்டனர். இதனால் போலியாக மதசார்பின்மை பேசி சிறுபான்மை மக்களை ஏமாற்றி ஓட்டு பொருக்கி வந்த காங்கிரஸ் கட்சி, இந்த இயக்கங்களை, முஸ்லிம் அரசியல் கட்சிகளை முடக்க உளவுத்துறையில் ஒரு முஸ்லிமை கொண்டு வந்திருக்கிறது. இனி எதை செய்தாலும் உளவுத்துறையின் தலைவர் முஸ்லிம்தானே என்று சொல்லிக்கொள்ள இலகுவாக இருக்கும் இல்லையா. காங்கிரஸ் கட்சியின் அரசியல் சூதாட்டத்தின் புதிய வரவே ஐபி துறையில் செய்யத் ஆஸிஃப் இப்ராஹீம் என்கிற முஸ்லிம்.
இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சி நடத்திய நாடகங்கள் பற்பல அந்த நாடகங்களின் ஒன்றே இந்த செய்யத் ஆஸிஃப் இப்ராஹீம். இவரை கொண்டே முஸ்லிம் இயக்கங்களின் செயல்பாடுகளை முடக்க காங்கிரஸ் செய்யும் தந்திரமே அன்றிவேறில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக