மிகப் பிரபலமான டைம் பத்திரிகை ஆண்டு தோறும் உலகின் மிகச் சிறந்த மனிதர்களைத் தேர்ந்தெடுத்து கெளரவிப்பது வழக்கம். அவ் வ்கையில் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக அமெரிக்க அதிபர் கொலைகார ஒபாமாவை அப் பத்திரிகை தேர்வு செய்துள்ளது. இது குறித்து அப்பத்திரிகை கூறுகையில், கலாசார ரீதியாகவும் மக்கள்தொகை ரீதியாகவும் மாறிவரும் அமெரிக்காவின் அடையாளமாகவும் நாட்டின் சிற்பியாகவும் ஒபாமா திகழ்கிறார் ? என்று தெரிவித்துள்ளது. அவரது படம் இப்பத்திரிகையின் அட்டையில் வெளியாக உள்ளது. ஒபாமா ஏற்கெனவே கடந்த 2008இல், ஆண்டின் சிறந்த மனிதராக அப்பத்திரிகை தேர்வு செய்திருந்தது. இப்போது, இப்பட்டத்துக்கு இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்ட 13ஆவது நபர் ஒபாமா ஆவார். அவரைத் தவிர, பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, எகிப்து அதிபர் முகமது மோர்சி, ஆப்பிள் நிறுவன அதிபர் டிம் குக், கடவுள் துகள் அணுவெடிப்புச் சோதனையில் ஈடுபட்ட பேபியோலா கியானோட்டி ஆகியோரையும் 2012ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் பட்டத்துக்கு டைம் பத்திரிகை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக