மாயா என்கின்ற இனத்தினரின் கலண்டர் 2012 ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதியோடு எந்தவித தகவல்களும் இல்லாமல் முடிவடைகிறது. இதனால் உலகம் 2012 டிசம்பர் மாதம் 21 தேதியோடு அழிந்து போகும் என்று சிலர் புரளியை கிளப்பி விட்டுள்ளனர். மேலும் சிலர் இன்னாளில் மிகபெரிய சுனாமி அல்லது பூகம்பம் ஏற்ப்படும் என்று ஆருடம் சொல்கின்றனர். வேறு சிலர் இந்த நாளில் சூரியனில் இருந்து வரும் விண்கல் பூமியை தாக்கும் என்றும், இதனால் பலர் வரும் வெள்ளிக்கிழமை பிள்ளைகளை பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்றும் நல்ல காரியங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்றும் ஆளாளுக்கு ஆதாரம் இல்லாத பொய்களை பரப்பி வருகின்றனர்.
மாயா இனத்தவரின் வரலாறு: மாயா இனத்தவரின் கலண்டருக்கு TUN என்று பெயரிட்டிருக்கிறார்கள். மாயா கலண்டர் சூரிய, சந்திர கிரகணம் முதல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்கூட்டிய விபரங்களை பதிந்து வைத்திதிருப்பதாக சொல்கின்றனர்.
சுமார் 4,600 ஆண்டு பழமை வாய்ந்த மாயன் நாகரீகம் (Mayan civilization) பிரேசில், எல்.சவேடார், கொத்தமாலா பகுதிகளில் தொடங்கி, தென் அமெரிக்கா முழுவதும் பரவியிருந்தது. கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றியது என்றும் சொல்கிறார்கள். இந்த நாகரீகம் 9ம் நூற்றாண்டோடு அழிந்து போனது.
மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைகிறது.
சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க் கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர் கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து விலகி நேர் எதிராக பயணிக்குமாம். இதனால் புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்பட்டு உலகம் அழியும் என்பது மாயர்களின் நம்பிக்கை. இது வெறும் நம்பிக்கையே இப்படி ஒருவேளை நடக்கலாம் ஆனால் அது 2012ஆம் ஆண்டுதான் நடக்கும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் ஆதராங்களும் இப்பொழுது இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக