செவ்வாய், டிசம்பர் 11, 2012

ரஷ்ய ஆற்றின் கீழே கொழுந்துவிட்டு எரியும் எரிமலைக்குழம்பு !


ரஷ்யாவில் உள்ள ஒரு ஆற்றின் கீழே எரிமலை போல நெருப்புகுழம்பு எரிந்து கொண்டிருப்பதை அமெரிக்காவின் சாட்டிலைட் படம் பிடித்துள்ளது. இதனால் ரஷ்யா முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ரஷ்யாவின் Kamchatka Peninsula என்ற இடத்தில் உள்ள ஆற்றின் தண்ணீருக்கு அடியில் லாவா என்ற எரிமலையின்  நெருப்புக்குழம்பு
 ஓடிக்கொண்டிருப்பதை அமெரிக்காவின் நாசா படம் பிடித்துள்ளது. அந்த ஆற்றின் தண்ணீர் பயங்கரமாக கொதிநிலையில் உள்ளதாகவும், அருகிலுள்ள கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உடனே அந்த கிராமத்தில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கவும் ரஷ்ய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.
வோல்கானா என்று சொல்லப்படும் இந்த நெருப்புக்குழம்புகளை இன்ஃப்ரா ரெட் கதிர்கள் மூலம் படமெடுத்த நாசா, அதன் வெப்பநிலையை கணக்கிட்டு, தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் Peninsula அருகிலுள்ள பனிமலையின் ஐஸ்கட்டிகள் எரிந்து கொண்டிருக்கின்றன. டிசம்பர் 21ல் உலகம் அழியும் என்ற மாயன் காலண்டர் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதோ என பொதுமக்கள் பயத்தில் உறைந்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக