செவ்வாய், டிசம்பர் 11, 2012

இங்கிலாந்து நர்ஸ் தற்கொலைக்கு காரணமான ஆஸ்திரேலிய வானொலி நிலைய DJக்கள் பகிரங்க மன்னிப்பு !

இங்கிலாந்து இளவரசி கேத் வின்செண்ட் கர்ப்ப மருத்துவ அறிக்கை கசிவுக்கு காரணமாக இருந்த நர்ஸின் தற்கொலைக்கு காரணமான ஆஸ்திரேலிய வானொலி நிலைய அறிவிப்பாளர்கள் இன்று முதன்முதலாக பத்திரிகையாளர்கள் முன் தோன்றி, தங்களது வருத்தத்தை கண்ணீருடன்
தெரிவித்தனர். Mel Greig  மற்றும் Michael Christian ஆகிய அந்த இரண்டு அறிவிப்பாளர்கள் இன்று காலை தங்களது 2Day FM வானொலி நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். தங்களது விளையாட்டுத்தனமான, முட்டாள்தனமான செய்கையால் தாயை இழந்து வாடும் நர்ஸின் குழந்தைகளிடம் தாங்கள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளனர்.
இவ்வாறு நடக்கும் என்பதை நாங்கள் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை என்று அழுதுகொண்டே கூறிய Mel Greig  தங்களது தவறான செய்கையால் நர்ஸ் Jacintha Saldanha தற்கொலை செய்துகொண்டது, தங்களது இதயத்தை சுக்குநூறாக உடைத்துவிட்டது என்றும் இதற்காக நாங்கள் நர்ஸ் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக