தங்கள் நாட்டிலிருந்து வாங்கிய ஆயுதங்களை மியான்மருக்கு வழங்கியது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஸ்வீடன் அரசு இந்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து ஸ்வீடன் வர்த்தக அமைச்சர் இவா ஜோர்லிங் கூறியதாவது :
மியான்மர் ராணுவ வீரர்களின் பின்னணியில் "கார்ல் கஸ்டப் எம்3 ஆன்டி-டேங்க் ரைஃபிள் மற்றும் சில
தளவாடங்கள்' இருப்பது போன்ற புகைப்படம் ஸ்வீடன் ஊடகங்களில் வெளியானது. அந்த ஆயுதத்தில் இருந்த வரிசை எண்ணும் தெளிவாகத் தெரிந்தது.
கடந்த 1996ஆம் ஆண்டு முதல் மியான்மருக்கு ஆயுதங்கள் வழங்க ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஸ்வீடனில் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுதங்கள் மியான்மரில் இருப்பது குறித்து ஸ்வீடன் அணு ஆயுத பரவல் தடுப்பு மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்பு (ஐஎஸ்பி) ஆய்வு செய்தது.
ஆய்வில் அந்த ஆயுதங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு ஸ்வீடன் வழங்கியது எனத் தெரியவந்துள்ளது. எனவே, இந்த ஆயுதங்களை மியான்மருக்கு வழங்கியது குறித்து விளக்கமளிக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என ஜோர்லிங் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக