இனி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முதல் முறை குற்றம் செய்பவர்கள் மீது கூட குண்டர் சட்டம் பாயும்.அத்துடன் சைபர் குற்றம் செய்பவர்களுக்கும் இது பொருந்தும். சாலை மறியலுக்கு 30 நாளுக்கு
முன்பே அனுமதி பெற வேண்டும். அப்படி பெறாமல் நடத்தப்படும் மறியல் தடை செய்யப்படும். சென்னையில் 3 நாள் நடந்த கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை முடித்து வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, மொத்தம் 343 அறிவிப்புகளை வெளியிட்டார். பல மாவட்டங்களில் சாலை, பாலம், பள்ளி சீரமைப்பு உட்பட பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளும் இதில் அடங்கும். அதுபோல, சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வகையில் சில அதிரடி அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
முன்பே அனுமதி பெற வேண்டும். அப்படி பெறாமல் நடத்தப்படும் மறியல் தடை செய்யப்படும். சென்னையில் 3 நாள் நடந்த கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை முடித்து வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, மொத்தம் 343 அறிவிப்புகளை வெளியிட்டார். பல மாவட்டங்களில் சாலை, பாலம், பள்ளி சீரமைப்பு உட்பட பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளும் இதில் அடங்கும். அதுபோல, சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வகையில் சில அதிரடி அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
ஜெயலலிதா வெளியிட்ட சில முக்கிய அறிவிப்புகள்:
* அனைத்து அரசு பள்ளிகளில் 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அறைகளில் இந்தியா, தமிழகம், மாவட்ட வரைபடங்கள் வைக்கப்படும்.
* பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் தேவைக்காக பால் பண்ணை அமைக்கப்படும்.
* மாவட்ட வளர்ச்சி நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படுகிறது.
* திருவாரூர் அரசு மருத்துவமனையும், கரூர் அரசு மருத்துவமனையும், ராமநாதபுரம் மாவட்ட மருத்துவமனை, ஊட்டி
மருத்துவமனை ஆகியவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தரத்துக்கு உயர்த்தப்படும்.
* காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குளித்தலை, தோகைமலை பகுதிகளையும் சேர்க்க ரூ.12.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* வைகை ஆற்றில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தடுப்பணைகள் கட்டப்படும்.
* ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கப்படும்.
* ராமநாதபுரம் , தூத்துக்குடி சாலை 4 வழிப்பாதையாக மாற்றப்படும்.
* ராமநாதபுரத்தில் பெரிய மின்திட்டம் தொடங்கப்படும்.
* திருச்சி மாவட்டத்துக்கு 3 கூடுதல் பட்டாளியன்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும்.
* தர்மபுரி கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 99 புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
* தர்மபுரியில் நக்சலைட்டுகள் இல்லாத 32 கிராமங்களுக்கு ரூ.20 கோடியில் வளர்ச்சி திட்டங்கள், சிப்காட் தொழிற்பேட்டை,
சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
* போலீசாருக்கான ரொக்கப்பரிசு ரூ.300ல் இருந்து ரூ.600 ஆகவும், கூட்டு நடவடிக்கைக்கான பரிசு ரூ.1,500 ல் இருந்து ரூ.^3,000 ஆகவும் உயர்த்தப்படும்.
* பழனியில் கூடுதல் ரோப் கார் அமைக்கப்படும்.
* கன்னியாகுமரி மாவட்டத்தில் 37 மாநில எல்லை சோதனை சாவடிகளுக்கு தனி போலீஸ் பிரிவு அமைக்கப்படும்.
* போலீஸ் அதிகாரிகளுக்கு இடையே வீடியோ கான்பரன்சிங் வசதி ஏற்படுத்தப்படும்.
* திருச்சி , சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
* குண்டர் சட்டம் கடுமையாக்கப்படும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முதல் முறை குற்றம் செய்பவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்.
* சைபர் கிரைம் குற்றம் செய்தவர்களும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவர்.
* உணவுப்பொருட்கள் உட்பட கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் போது, அந்த கடத்தல் குற்றத்தில்
ஈடுபட்டவர்கள் மீதும் குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
* குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்வதற்கான செலவுத்தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* அதிக பாதுகாப்பு கொண்ட சிறை கைதிகளை அழைத்து வரும் போலீசாருக்கான செலவுத்தொகை ரூ.35ல் இருந்து ரூ.100ஆக உயர்த்தப்படுகிறது.
* சென்னை, ஆயுதப்படை பிரிவுக்கு நிர்வாக கட்டிடம் கட்டப்படும்.
* விஐபிக்களுக்கான கான்வாய் வாகனங்கள் மாற்றப்பட்டு, அதிவேக வாகனங்கள் வாங்கப்படும்.
* புழல், வேலூர், கடலூர், சேலம் மத்திய சிறைச்சாலைகளில் பொருட்களை ஸ்கேன் செய்வதற்கான கருவி வாங்க தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும்.
* பேரழிவு எதிர்ப்பு பிரிவுக்காக நவீன சாதனங்கள் வாங்க ரூ.98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் எஸ்பிக்களுக்கு உதவுவதற்காக ஒரு சட்ட அதிகாரி நியமனம்.
* பள்ளி படிப்பிலேயே சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது தொ டர்பான பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
* ரூ.42 லட்சம் செலவில் வெடிகுண்டு மோப்ப நாய்கள் பிரிவு விரிவாக்கப்படும்.
* டிஜிபி, கூடுதல் டிஜிபி, ஐஜி ஆகியோருக்கான நிர்வாக அதிகாரங்களில் மாற்றம் செய்யப்படும்.
* தாலுகாக்களை பிரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் பரிந்துரையின்படி தாலுக்காக்கள் பிரிக்கப்படும்.
* அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ , மாணவிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை முழுவதையும் வழங்குவதையும், கல்வி உதவித்தொகை வழங்குவதையும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கவனிக்க வேண்டும்.
* பள்ளி குழந்தைகளுக்கான படிப்பு உபகரணங்கள், பைகள் ஆகியவை ஜனவரி மாதம் வழங்கப்பட உள்ளது. அந்த சாதனங்களின் தரத்தை உறுதிப்படுத்தி சரியான வகையில் மாணவர்களுக்கு வழங்க கலெக்டர்கள் முன்வர வேண்டும்.
* பொதுமக்களுக்கான இந்த திட்டங்களை ஒவ்வொரு மூத்த அதிகாரிகளும் மாதம் ஒருமுறை கள ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் மாதம் ஒருமுறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.”’என்று ஜெயலலிதா அறிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக