புதன், டிசம்பர் 12, 2012

சீன நெடுஞ்சாலையின் நடுவில் இருந்த வயதான தம்பதிகளின் வீடு இடிக்கப்பட்டது !

சீனாவில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக தனியாரிடம் இருந்து நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும்போது, சீனாவில் வாழும் ஒரு மூத்த தம்பதிகள், தங்கள் வீடு உள்ள இடத்தை நெடுஞ்சாலைக்கு தர மறுத்தனர். எனவே அவர்களுடைய வீட்டை நடுவில் விட்டுவிட்டு, வீட்டைச்சுற்றிலும் சாலையை அமைத்தனர்.Duck farmer Luo Baogen மற்றும் அவரது மனைவி மட்டுமே வாழும் அந்த வீட்டிற்கு அரசு நியமித்த தொகையைவிட கூடுதலான தொகையை தர முன்வருவதாக, நெடுஞ்சாலை துறையினர் சென்ற வாரம் அந்த வயதான தம்பதிகளிடம் பேரம் பேசினர். இதற்கு ஒத்துக்கொண்ட அந்த தம்பதியினர் தங்களது வீட்டை, 260,000 yuan கொடுத்தால், இடத்தை தர சம்பதிப்பாக தெரிவித்தனர். நெடுஞ்சாலை துறையினரும், அவர்கள் கேட்ட தொகையை கொடுத்து, இடத்தை கைப்பற்றினர்.பின்னர் அவர்கள் வீட்டை காலிசெய்தவுடன், வீட்டை புல்டோசர்கள் மற்றும் கிரைன் உதவியுடன் இடித்து தரைமட்டமாக்கினர். சாலையின் நடுவில் குறுக்கே கட்டிடம் இருந்ததால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இனி அந்த சிரமம் இல்லாமல் வாகன ஓட்டிகள் செல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக