நெதர்லாந்தில் இருந்து அணு ஆயுத கழிவுகளை ஏற்றிக் கொண்டு பிரான்சுக்குள் நுழைய முயன்ற தொடர்வண்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது.அணு கழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ்- பெல்ஜியம் எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தினர். இவர்கள், டச்சு அணுசக்திக் கழிவுகளை பிரான்சுக்குள் அனுமதிக்க மாட்டோம். அது கொண்டுவரப்படும் வழியில் எல்லாம் ஏராளமான வெப்பத்தையும் கதிர்வீச்சையும் வெளிப்படுத்தும். இதனால் பாதிப்பு ஏற்படும் என்று கூறி போராட்டம் நடத்தினர்.
ஆனால் பிரெஞ்சு அதிகாரிகள் கூறுகையில், இந்த தொடர்வண்டியை போன்று 200 வண்டிகள் பிரான்சை கடந்து செல்லும்.
இதன் பெட்டிகளிலிருந்து அணு சக்தி கதிர்வீச்சு கசியாத வண்ணம் பாதுகாப்பான கொள்கலன்களில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது என்று தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக