வெள்ளி, டிசம்பர் 14, 2012

குஜராத் தேர்தல் - 66 சதவிகிதம் வாக்குப்பதிவு. . .


அஹமதாபாத் - குஜராத்தில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 66 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.  குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று 87 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்த வாக்குப்பதிவில் 66 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. பதட்டம் நிறைந்த சில வாக்குச்சாவடிகளில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று நடைபெற்ற அனைத்து தொகுதிகளிலும் பாரதீய ஜனதா போட்டியிடுகிறது. காங்கிரஸ் 84 தொகுதிகளிலும் , குஜராத் பரிவர்த்தன் கட்சி 83 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. குஜராத் பரிவர்த்தன் கட்சி, பாரதீய ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து சென்ற கேசுபாய் பட்டேல் ஆரம்பித்த புதிய கட்சியாகும்.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 17 ஆம்திகதி நடைபெற உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக