வெள்ளி, டிசம்பர் 14, 2012

12.12.12 தினத்தில் 12 விரல்களுடன் பிறந்த குழந்தை !

கேரள மாநிலம் கோட்டயம் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தை ஒன்றுக்கு 2 கைகளிலும் சேர்த்து 12 விரல்கள் இருந்தன. அந்த குழந்தையின் தந்தை ஷானு, ஆட்டோ ஓட்டுநர் ஆவார். தாயின் பெயர் திவ்யா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யாவுக்கு 18ம் திகதி பிரசவம் இருக்கும் என்று டொக்டர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் நேற்று அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட, உறவினர்கள் அவரை கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு
ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 12 விரல்கள் இருந்ததால் மருத்துவமனை ஊழியர்கள் இதனை அதிசயமாக பிறரிடம் தெரிவித்தனர்.
மேலும், இதை அறிந்த பலரும் அந்த குழந்தையை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக