செவ்வாய், டிசம்பர் 11, 2012

முஸ்லிம்களின் உணர்வுகளை மீண்டும் சீண்டிப்பார்க்க முயற்சி !!

முஹம்மது நபி அவர்களை இழிவுபடுத்தும் வகையில் படமெடுத்து மீண்டும்-மீண்டும், முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் முயற்சிகளில் விஷமிகள் பலர், கங்கணம் கட்டி இறங்கியுள்ளனர்.

சமீபத்தில் நபியவர்களை இழிவு படுத்தி வெளியான "தி இன்னோசென்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்" என்ற அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து, உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து ஓய்ந்துள்ள நிலையில், தற்போது இஸ்லாமிய கொள்கையை விட்டு வெளியேறி, ஸ்பெயினில் வாழ்ந்து வரும் பாகிஸ்தான் பிரஜையான இம்ரான் பிராசத் என்பவன், நபியவர்களை இழிவுபடுத்தி "THE INNOCENT PROPHET-LIFE OF MUHAMMAD" From the point of view of an Ex -Muslim.
"ஒரு முன்னாள் முஸ்லிமின் பார்வையில், அப்பாவி தூதர் முஹம்மத் நபியின் வாழ்க்கை" என்னும் பெயரில் திரைப்படத்தை தயாரித்துள்ளான்.
படத்தை, இம்மாதம் 14 ந்தேதி திரையிட திட்டமிட்டிருந்த இவன், இந்தப்படம் வெளியிடப்பட்டால், ஸ்பெயினில் வாழும் மக்களில், 4 ல் 3 நபர்கள் இதை எதிர்ப்பார்கள், என ஸ்பெயின் அரசு எச்சரித்ததை தொடர்ந்து, படம் திரையிடப்படுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பணத்தாசையால் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய இந்தக்கயவன் இம்ரான், குரானை அவமதித்த இஸ்லாமிய எதிரியான அமெரிக்க பாதிரியாரான "டெர்ரி ஜோன்சை" தனது வழிகாட்டி என, ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியுள்ளான்.
இந்த படத்தின் ஆரம்பத்தில் தோன்றி,  இஸ்லாத்தை முழுமையாக தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், அதன் ஆழம்வரை சென்று பார்ப்பது அவசியம் எனக்கூறும் அவன், முஹம்மது நபி உண்மையில் இறுதித்தூதராக அனுப்பப்பட்டவரா? அல்லது அவராகவே தன்னை இறைத்தூதர் என பிரகடனப்படுத்திக்கொண்டாரா? என்பதை இந்தப்படம் பார்ப்போர் தெரிந்துக்கொள்வர், என முன்னுரை வழங்கியுள்ளான்.
டெர்ரி ஜோன்சும் இந்தப்படம் குறித்து தனது வெப்சைட்டில், இஸ்லாத்தை பற்றி இதுவரை வெளி வராத பல விஷயங்கள் வெளிப்படுவது, தனது சந்தோஷத்தை அதிகரிப்பதாக தெரிவித்து இம்ரானுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக