வியாழன், டிசம்பர் 13, 2012

ஹைதராபாத் ஆஸ்பத்திரியில் குழந்தையின் கைவிரல்களை பூனை கடித்து தின்றதாக பெற்றோர்கள் புகார் !

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாத்தின் அரசு மருத்துவமனையில் தினக்கூலி ஒருவரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அங்கு தங்கி தாயும் சேயும் சிகிச்சை பெற்றுவந்த போது குழந்தையின் கையை பூனை கடித்துள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த இந்த தவறை மறைக்க பெற்றோர்களுக்கு தெரியாமல் கையில் கட்டு போட்டு அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருக்கின்றனர்.
 
குழந்தையின் கையை பிரிக்கவேண்டாம் மற்றும் யாருக்கும் இந்த குழந்தையை காட்டவேண்டாம் என்று கூறி அந்த குழந்தையை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி அவர்களுடைய கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டுக்கு சென்ற அந்த தினக்கூலி பெற்றோர்கள் குழந்தையின் கையில் சுற்றியிருந்த துணியை பிரித்து பார்த்தனர்.
 
அப்போது குழந்தையின் கையில் விரல்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் மனித உரிமை அமைப்பினர் அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு, அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக