சவூதி அரேபியாவின் மதீனா நகரில் தன் கணவரிடமிருந்து மணவிலக்கு வேண்டியுள்ள பெண்ணொருவர், மீண்டும் கணவருடன் இணைந்து வாழ புதுமையான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். அதாவது, அந்தக் கணவர் ஏதேனும் இரண்டு அனாதைக் குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்கும், அந்தக் குழந்தைகளைச் சேர்த்துக்கொண்டு உடன் வாழவும் முன் வர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். மதீனா நகர நீதிமன்றத்தின் குடும்பவியல் சமரசக் குழுவிடம் தனது நிபந்தனைகளை அம்மனைவி
அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார். "இரண்டு அனாதைக் குழந்தைகளைப் பராமரித்து உடன் சேர்த்து வாழ அவர்(கணவர்) முன்வர வேண்டும் "என்பதே கணவரை மீண்டும் சேர்த்துக்கொள்வதற்கான தன் நிபந்தனை என்றார் அப்பெண். "வேறெந்த கூடுதல் பணமோ, பரிசுகளோ தேவையில்லை" என்றும் அப்பெண் கூறியுள்ளார்.மனைவியின் புதுமை நிபந்தனை வியப்பளிப்பதாகக் கூறினாலும், தான் அதற்கு இணங்குவதாக அந்தக் கணவரும் தெரிவித்துள்ளார் "எனினும், அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றார் அவர் கணவருக்கு உரியப் பொறுப்புணர்வை ஊட்டும் வகையில் அப்பெண் இப்படியொரு நிபந்தனையை விதித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
முன்னதாக, ஒன்பது வருட இல்லற வாழ்க்கைக்குப் பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்துவிடக் கருதி அப்பெண் மதீனாவின் குடும்பவியல் நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக