ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 5ம் வகுப்பு படிக்கும் 11 வயது பள்ளி மாணவி தனது வகுப்புக்கு கையெறி குண்டுடன் வந்ததால் பள்ளியில் பெரும் பீதியும், பதட்டமும் ஏற்பட்டது. சிட்னி நகரில் உள்ள ஹன்டர் கிறிஸ்டியன் பள்ளியில் படித்து வரும் இம்மாணவி, பள்ளிக்கு வழக்கமான நேரத்தில் வந்தார்.
அவர் பள்ளி பொதியில் வைத்திருந்த கையெறி குண்டை எடுத்து வகுப்பில் வைத்தார்.
இதைப் பார்த்த ஆசிரியை மற்றும் சக மாணவ, மாணவியர் பெரும் பீதியடைந்தனர்.
உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் விரைந்து வந்தனர்.
மேலும் பள்ளியில் இருந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டனர்.
அதன் பின்னர் அந்த கையெறி குண்டை வெடிகுண்டு நிபுணர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அந்த கையெறி குண்டு 2ம் உலகப் போர் மற்றும் வியட்நாட் போரின்போது பயன்படுத்தப்பட்ட கையெறி குண்டின் வடிவில் இருந்தது.
இந்த கையெறி குண்டை தற்போது பாதுகாப்புப் படையினர் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரி லாசன் கூறுகையில், தான் கொண்டு வந்தது போலி கையெறி குண்டு என்றுதான் அந்த மாணவி நினைத்திருக்கிறாள். அவளது வீட்டில் இந்த கையெறி குண்டு இருந்ததாம்.
அம்மாணவியின் குடும்பத்தார் அதை பல வருடங்களுக்கு முன்பு யாரிடமிருந்தோ வாங்கி வீட்டில் வைத்துள்ளனர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக