வியாழன், டிசம்பர் 06, 2012

புதிய ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது வடகொரியா: அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது

வடகொரியா தயாரித்துள்ள புதிய ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு அந்நாடு தயாராகி வருகின்றது. வடகொரியாவின் முன்னாள் ஜனாதிபதியான கிம் இ-சுங்-கின் 100வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வடகொரியா நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக கடந்த ஏப்ரல் மாதம் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஏவிய சில நிமிடங்களுக்குள் வெடித்து சிதறி மஞ்சள் கடலில் விழுந்தது.

இதனையடுத்து தொலை தூரம் பயணிக்கும் ராக்கெட் ஒன்றை ஏவ அந்நாட்டு அரசு திட்டமிட்டது.
இதற்கான பணிகள் கடந்த 8 மாதங்களாக படுவேகமாக நடந்து வந்தது. இந்நிலையில் பியாங்கன் மாகாணத்தில் உள்ள கோகாயே ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை செலுத்த வடகொரியா தயாராக உள்ளதாக ஜப்பான் ஊடகம் முதன் முதலாக செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் வரும் 10-12 திகதிகளுக்குள் ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளதாக வடகொரியா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
ராக்கெட் தயாரிப்புக்கான முதல் கட்ட பணிகள் முடிவடைந்து, 2ம் கட்ட பணிகள் நடந்து வருவதாகவும், 3ம் கட்ட பணிகள் முடிவடைந்ததும், திட்டமிட்ட திகதிக்குள் ராக்கெட் ஏவப்படும் என்றும் வடகொரியா அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
மேலும், அதன் எதிரி நாடான தென் கொரியாவின் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வரும் 19ம் திகதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக