சென்னையில் நடந்த பேருந்து விபத்தில் நான்கு மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக, ஓட்டுநர், நடத்துநர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.மேலும், தப்பியோடிய லொரி ஓட்டுநர் ரமணய்யாவை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கு முன்னதாக, சென்னை திருப்போரூரிலிருந்து நேற்று காலை தியாகராய நகர் நோக்கி மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பல மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர்.
அப்போது, கந்தன்சாவடி பகுதியில் குறுக்கே உள்ள சாலையில் இருந்து பின்னோக்கி வந்த லொரி, பேருந்தின் பக்கவாட்டில் மோதியதில் சேகர், விஜய், மனோஜ் மற்றும் பாலாஜி ஆகிய 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக