செவ்வாய், டிசம்பர் 11, 2012

அரியானா கல்லூரியில் ஜீன்ஸ் அணிந்த வந்த 4 மாணவிகளுக்கு ரூ.100 அபராதம் !

அரியானா மாநிலத்தில், பெண்கள் கல்லூரி ஒன்றில், "ஜீன்ஸ்  மற்றும் "டி-ஷர்ட்  அணிந்து வந்த நான்கு மாணவியருக்கு தலா, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின், புது கட்டுப்பாட்டுக்கு, மாணவியர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அரியானா மாநிலம், பிவானியில் ஆதர்ஷ் பெண்கள் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் படிக்கும், மாணவியருக்கு உடை அணிவதில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்ட்
உட்பட, பேஷன் ஆடைகளை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டது.கல்லூரிக்கு வரும் போது, சல்வார் கமீசு மட்டுமே அணியலாம் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், நேற்று கல்லூரிக்கு, ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து, நான்கு மாணவியர் வந்தனர்.இதையறிந்த, கல்லூரி முதல்வர் அல்கா சர்மா, நான்கு பேரையும் அழைத்து கண்டித்தோடு, தலா, 100 ரூபாய் அபராதம் விதித்தார். இதற்கு, மாணவியர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கல்லூரி முதல்வர் அல்கா சர்மா கூறுகையில், ""மாணவியரை நல்வழிப்படுத்தவும், அவர்களை, "ஈவ்-டீசிங்  செய்வதை தடுக்கவும், இந்த கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளோம். இதற்கு, பெற்றோர் மத்தியில் வரவேற்பு உள்ளது,   
என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக