மும்பை : மஹாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற இருப்பதை முன்னிட்டு மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) மற்றும் சிவசேனா சட்டத்தை கையில் எடுக்கும் வழக்கத்தை அரங்கேற்ற தொடங்கி விட்டன. ஆனால் இத்தடவை ஆசிரியர்களுக்கு எதிரான சேனாவின் வன்முறைக்கு எதிராக அணி திரண்டிருக்கின்றன பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும்.
பால் தாக்கரேவின் சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் வன்முறைக்கு பலியானது நவி மும்பையில் உள்ள டேஏவி பொது பள்ளியின் பிரின்ஸிபல் ஜோஸ் குரியன். பள்ளிகூடத்திலிருந்து மாணவர்களை அழைத்து செல்லும் பேருந்து பாதுகாப்பானதாக இல்லைஎன்று கூறி பள்ளியினுள் நுழைந்த சேனாவினர் பிரின்ஸிபலின் முகத்தில் கரியை பூசினர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஜோஸ் குரியன் “ இது எனக்கு மிகவும் அதிர்ச்சியும் அவமானமும் அளித்தது என்றாலும் இதை எதிர்த்து போராடவே விரும்பினேன்” என்றார். தற்போது புனே மற்றும் மும்பையிலுள்ள 200 பள்ளிகூடங்களும் சேனாக்களின் இத்தகைய வன்முறைகளை அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று போர்குரல் எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக