திங்கள், டிசம்பர் 19, 2011

மாஸ்கோவிலும் பரவும் மல்லிகை புரட்சி, ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்


மாஸ்கோ : ரஷ்யாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி ஆயிரக்கணக்கானோர் மாஸ்கோ மற்றும் பீட்டர்ஸ்பெர்க் சாலைகளில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். க்ரெம்ளினின் வெளியே ஒன்று கூடிய கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த போராட்டக்காரர்கள் வாக்குகளை மறுபடியும் எண்ண வேண்டும் என்றும் அரசாங்கம் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் வற்புறுத்தினர். பீட்டர்ஸ்பெர்கில் ஒன்று கூடிய பல்வேறு அமைப்புகளை சர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
“புடின் இல்லா ரஷ்யா வேண்டும்” என்று கோஷமெழுப்பினர். அரபுலக வசந்தம் என்று அழைக்கப்படும் மல்லிகை புரட்சி அரபு ஆப்பிரிக்க நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிறகு அமெரிக்காவில் பொருளாதார போராட்டங்களை ஏற்படுத்தியதை போன்று ரஷ்யாவில் நீண்ட காலமாக ஆட்சி செய்யும் புடினுக்கெதிராக வெடித்திருப்பதாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக