புது தில்லி, டிச-17- பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கைவிட்டுள்ளன.முன்னதாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 60 பைசா முதல் 70 பைசா வெள்ளிக்கிழமை இரவு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை சிறிது ஏற்றம் பெற்றது.இந்நிலையில் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் விலை உயர்வு இல்லை என்ற முடிவை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக