திங்கள், டிசம்பர் 12, 2011

அமைச்சர் ஒ பன்னீர்செல்வத்தை புரட்டி எடுத்த தமிழக மக்கள்!

Farmers and local people taking out a rally at Kumily near Kerala border in Theni district on Sunday.குமுளி பகுதியில், முல்லைப் பெரியாறு அணையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த சென்ற நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கப்பட்டார். கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது. போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. முல்லைப் பெரியாறு அணையை மீட்போம் என்ற
கோஷத்துடன், போலீசாரின் தடை உத்தரவை மீறி நேற்றும் ஐம்பதாயிரம் பேர், தமிழக எல்லைப் பகுதியில் உள்ள குமுளி அரசு போக்குவரத்துக் கழக டெப்போ முன்பு குவிந்திருந்தனர். 

அவர்களை ஐஜி., ராஜேஸ்தாஸ் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ‘அணையை மீட்க கேரளாவிற்கு செல்ல போகிறோம்Õ என்று மாலை வரை போராட்டக்காரர்கள் கோஷமிட்டபடி இருந்தனர். அவர்களை கலெக்டர் பழனிச்சாமி, ஐஜி., ராஜேஸ்தாஸ் சமாதானப்படுத்தியபடி இருந்தனர். அப்பகுதிக்கு, மாலை 3 மணியளவில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய அவர், ‘உங்கள் கோரிக்கைகள் குறித்து முதல்வருக்கு தெரிவிக்கப்படும். இதற்காக தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதுÕ என்று பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது, கூட்டத்தில் ஒருவர் திடீரென உருட்டுக் கட்டையால் ஓ.பன்னீர்செல்வத்தை தலையில் தாக்கினார். கற்கள், செருப்புகளும் வீசப்பட்டன. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உடனே போலீசார் அமைச்சரை பாதுகாப்பாக அழைத்து வந்தனர். இதையடுத்து, குவிந்திருந்த மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மலைச்சாலையில் நின்ற 12 போலீஸ் வேன்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

கம்பம் எல்லை பகுதியில் இருந்த கேரளத்தவருக்கு சொந்தமான ‘மலநாடு பால் பண்ணையைÕ போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். அங்கிருந்த மினி லாரிக்கு தீ வைக்கப்பட்டது. மண்புழு உரம் தயாரிக்கும் தொழிற்கூடம், வேப்பம் புண்ணாக்கு தயாரிக்கும் தொழிற்கூடமும் அடித்து நொறுக்கப்பட்டது.

இதனிடையே, குமுளியில் இருந்து கூடலூருக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அங்கு அமைச்சரின் காரை கும்பல் வழிமறித்தது. முல்லைப் பெரியாறு அணை யை மீட்க போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியது ஏன்? எனக்கூறி எதிர்த்து கோஷம் எழுப்பினர். காரை கும்பல் சூழ்ந்ததால், கூடலூரில் இருந்து கம்பம் செல்ல முடியாமல், மாற்றுப்பாதையான சுருளிபட்டி வழியாக அமைச்சரை போலீசார் அனுப்பி வைத்தனர். எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, குமுளி, கம்பம் கூடலூரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. குமுளியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக