அண்மைக்காலமாக பாகிஸ்தான் – அமெரிக்கா இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி. தங்கள் நாட்டு வான்வெளியைப் பயன்படுத்த, அமெரிக்காவுக்கு
தடை விதிக்கப்படும் என எச்சரித்தார். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே பரஸ்பர நம்பிகை குறைந்து வருவதாகவும், கிலானி கூறினார். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது, திட்டமிட்டே நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என குற்றம்சாட்டிய அவர், நேட்டோ படையின் வாகனங்கள், தமது நாட்டுக்குள் நுழைய, தடை விதிக்கும் எண்ணம் உள்ளதாகவும் தெரிவித்தார். அமெரிக்காவுடனான நம்பிக்கையை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் கூறினார். சில நாட்களுக்கு முன்பு நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக