திங்கள், டிசம்பர் 12, 2011

இலங்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள், நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள், நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.தடையை மீறினால், விமான நிலையத்திலேயே அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கை அரசு எச்சரித்துள்ளது. இலங்கையில், உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை, படிப்படியாய் விடுவித்து வருவதாக அரசு கூறினாலும், அவர்களை வாரத்திற்கு ஒருமுறை, ராணுவ முகாமிற்கு அழைத்து விசாரிப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களை, ராணுவத்தினர் மிரட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது. வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேற முயலும் அவர்கள், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் போர்க்குற்ற வழக்குகளில் சாட்சியங்களாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே இலங்கை அரசு புதிய நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக