பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள ராம் திரத் கோயிலை இடித்துவிட்டு, அங்கு புதிய கோயிலை உருவாக்க, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதன்படி, அதனை இடிக்கச் சென்ற போது, வரலாற்றுப் பெருமை மிக்க கோயிலை சிதைக்கக் கூடாது என
மற்றொரு பிரிவினர் கோஷமிட்டனர். அப்போது இரு தரப்பினரும் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக