ஆப்கானிஸ்தான், துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகள் ஒரு சிறிய கப்பலில் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக புறப்பட்டு வந்தனர். இந்தோனேசியா கடல் பகுதியில் வந்தபோது அந்த கப்பல் திடீரென உடைந்து கடலில் மூழ்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மீனவர்களும், இந்தோனேசியா கடற்படையினரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த கப்பலில் 40 குழந்தைகள் உள்பட 400 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. கப்பல் மூழ்கியதால் அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. அளவுக்கு அதிகமானவர்களை ஏற்றியதால் கப்பலில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக