ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்தம் முடிவடைந்த போது கல்முனை பொலிஸ் நிலையம் உட்பட சில பொலிஸ் நிலையங்கள் விடுதலைப் புலிகளினால் முற்றுகையிடப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற பொலிஸ்
தமது மகனுக்கு நேர்ந்த சம்பவம் பற்றி
விசாரணை கோரும் பெற்றோர்
உத்தியோகத்தர்கள் இருவர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்திருந்தனர்.இந்த முற்றுகையின் பின்னர் 500 ற்கும் மேற்பட்ட பொலிசார் பற்றி அதற்குப் பின்னர் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. அவர்களில் பலர் அம்பாறை மாவட்டததைச் சேர்ந்த முஸ்லிம்கள்.
இந்த சம்பவம் தொடர்பில், அவ்வேளையில் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண பொறுப்பாளராக இருந்த கருணா என்றழைக்கப்படும் தற்போதைய துணை அமைச்சர் விநாயகமூரத்தி முரளிதரனுக்கு எதிராக சாட்சியமளித்தவர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாக நல்லிணக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டுமென்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசு தொடர்பாக மருதமுனையைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் பலரும் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தனர்.
இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழு முன்னலையில் சாட்சியமளித்திருந்த துணையமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், இந்த கொலைகளுடன் தமக்கு தொடர்பு எதுவுமில்லையென்று குற்றச்சாட்டுக்களை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக