திங்கள், டிசம்பர் 19, 2011

முஸ்லிம்களுக்கு, மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது : உத்தரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 40 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், முஸ்லிம்கள் அச்சத்துடனேயே வாழ்ந்ததாக, மாயாவதி தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா மற்றும் ஹிந்து அமைப்புகள் மீது, காங்கிரஸ் மென்மையான போக்கை கடைப்பிடித்ததால்தான், அவை பலம் வாய்ந்த அமைப்புகளாக மாறிவிட்டன என்றார் அவர். இதன் காரணமாகவே, பாபர் மசூதி இடிக்கப்பட்டதாகவும்
மாயாவதி குற்றம்சாட்டினார். இதர பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில், முஸ்லிம்களை சேர்க்கும் வகையில், அதன் இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் எனக் கூறிய மாயாவதி, இதற்காக அரசியல் சட்டத்தை, மத்திய அரசு திருத்தினால், அதனை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக